Wednesday, November 14, 2007

பெயர்க்காரணம் - I.A.S. படிப்பவர்கள் கவனிக்கவும்.

என்னடா இப்படி பேர் வச்சிருக்க - னு கேக்காத ஆள் இல்லை(யார் கேட்டா? இப்படிதாங்க என் மனசாட்சி அப்பப்ப உண்மைய சொல்லும் கண்டுக்காதிங்க) சின்ன வயசில இருந்து Collector ஆகரதுதான் என்னோட கனவுங்க. (கனவு மட்டும்தான்). 12th மார்க் வந்தப்ப தான் தெரிஞ்சது Collector க்கு பியூன் கூட ஆக முடியாதுன்னு. இருந்தாலும் கஷ்டப்பட்டு, காலேஜ் தாண்டினேன். நண்பர்கள் மற்றும் பெற்றோரின் அறிவுரையால் (எல்லா சப்ஜெக்ட் ல யும் 35 மார்க் வாங்கி பாஸ் பண்ண விசயத்தை வெளிய சொல்ல முடியுமா?) I. A. S. கனவ மூட்டை கட்டிட்டேன். சரி நம்மளை மாதிரி உருப்படாதவங்களுக்கு தான் M.C.A. இருக்கேன்னு M.C.A. படிச்சேன். இப்போ software engineer ஆ ஆயாச்சு. இருந்தாலும் கலெக்டர் கனவு போகவேயில்லை. சரி பேருக்கு பின்னால கலெக்டர் னு போடலாம்னு பாத்தா அதுவும் முடியதாம்ல. கலெக்டர் ன்னா என்னா ன்னு திடீர்னு ஒரு சந்தேகம் வர அகராதிய பாத்தா (நீயே ஒரு அகராதி) "One that collects" னு போட்டிருந்தது. அட அட அட!!!!. அப்படி பார்த்தா dust collect பண்றவன் dust collector. தமிழ்ல குப்பை பொறுக்கி. Bill collect பண்றவன் Bill collector. தமிழ்ல பில் பொறுக்கி. இப்படியே போனா நல்ல விசயங்களை (???????????) தேடித்தேடி கலெக்ட் பன்றவன என்னன்னு சொல்ல? நல்ல பொறுக்கின்னா? அதனால என்னோட கலெக்டர் கனவும் நனவாகிற மாதிரி சுருக்கமா பொறுக்கி ன்னு பேர் வச்சிருக்கேன். உங்களுக்கு தப்பா பட்டதுன்னா நீங்க நல்ல பொறுக்கின்னு வச்சிக்குங்க.