Friday, July 18, 2008

விக்ரமாதித்தனும் வேதாளமும்


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் மீண்டும் வேதாளத்தை வெட்டி தன் தோளில் போட்டு நடக்கும் போது வேதாளம் பேச ஆரம்பித்தது. விக்க்ரமதித்தா! ஏற்கனவே அம்புலிமாமாவில் வரும் கேள்வி பதில் போல இல்லாமல் நான் கேள்விப்பட்ட சேதிகளை உன்னிடம் கூறுகிறேன். அதற்கு உன் கருத்தை கூறு. அப்படி உன் கருத்தை கூறாவிட்டால் உன் தலை சுக்கு 99 ஆக வெடித்து விடும்.(எவ்வளவு நாள் தான் சுக்கு 100 ஆகவே உடைவது). அதற்கு ஒப்புக்கொண்ட விக்ரமாதித்தனிடம் வேதாளம் செய்திகளை கூற ஆரம்பித்தது.


வேதாளம் : திரிஷாவுக்கு கடலூரில் ரசிகர் மன்றம் ஆரம்பித்திருக்கிறார்களே.

விக்ரமாதித்தன் : கடலூரில் மட்டும் தான் திரிஷாவின் பாத்ரூம் CD அதிகம் கிடைக்கிறது போல் தெரிகிறது.

வெரிகுட் என்பது போல் பார்த்து வேதாளம் தொடர்ந்தது.

வேதாளம் : கனிகாவுக்கு அமெரிக்கா சாப்ட்வேர் எஞ்சிநீருடன் கல்யானமமே.

விக்ரமாதித்தன் :முதலில் (சசிகலா) நடராஜன். அடுத்து கன்னட பிரசாத்துடன் தொழில் செய்தார். இப்போ கல்யாணம். ஒருவேளை அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியர் என்றால் வேற எதாவது தொழிலா இருக்குமோ?

என்னிடம் கேள்வி கேட்காதே கருத்தை மட்டும் கூறு என்று வேதாளம் எச்சரித்து விட்டு தொடர்ந்தது.

வேதாளம் :வானம். காலை. பயணம்.நடக்கிறேன். காலம். நான். நீ. இல்லை. தெரியும்.தேடுகிறேன். தொடர்கிறேன். இது என்ன?

விக்ரமாதித்தன் :இது குங்குமத்தில் வெளியான பெண் கவிஞரின் கவிதை.

வேதாளம் : என்னது கவிதையா? என்று மயக்கமடைந்த வேதாளத்தை மயக்கம் தெளிவித்த


விக்ரமாதித்தன் : ஆம். பெண் கவிஞர்களுக்கு பொறுக்கியின் டெம்ப்ளட் தேவை இல்லை. அவர்கள் அரிசி. உப்பு. புளி. என்று எழுதினாலே கவிதை என்று போட்டு விடுவார்கள்.ஆகவே அவர்கள் பெண் கவிஞர்களாகி விடுகிறார்கள்.

வேதாளம் :கலைஞரின் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நோபெல் பரிசுக்கு அனுப்பும் குழுவில் இருவர் பெண் கவிஞர்களாமே?.

விக்ரமாதித்தன் :அழகிரியின் மகள் கவிஞர் கயல்விழியையும், கவிஞர் தமிழச்சியையும் சொல்கிறாய் என்று நினைக்கிறேன். அவர்கள் பெண் கவிஞர்களாதலால் அவர்களுக்கு கலைஞரின் எழுத்துக்கள் இலக்கியங்களாகவே தெரியும். அடங்கொய்யாலே நோபெல் பரிசு இவ்வளவு மட்டமானதா?

வேதாளம் : கவிஞர் கயல்விழி நான் என்றுமே கவிஞர் கனிமொழியுடன் போட்டிக்கு வரமாட்டேன் என்று சொல்கிறாரே?

விக்ரமாதித்தன் : இதற்கு மேல் கவிஞர் கயல்விழி பற்றி பேசினால் அழகிரியின் ஆட்களால் நானும் உன்னை மாதிரி வேதாளமாகி மரத்தில் தொங்க வேண்டியதுதான்.

(விக்கியை பரிதாபமாக பார்த்த வேதாளம் தொடர்ந்தது)சரி நடிகர் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று அவர் அப்பா சொல்கிறாரே?

விக்ரமாதித்தன் : அப்ப அடுத்த நோபெல் பரிசு விஜயின் "போடங்கோ" போன்ற இலக்கியத்துக்குதான் என்று நினைக்கிறேன்.

(சற்றே மிரண்ட வேதாளம் நோபெல் செய்திகளை தவிர்த்தது)தசாவதாரம் பற்றி உன் கருத்து என்ன விக்க்ரமாதித்தா?

விக்ரமாதித்தன் : ஏற்கனவே தசாவதாரம் பட போஸ்டர் முன்னாடி ஒன்னுக்கு அடிச்சவன்லாம் விமர்சனம் எழுதிவிட்டதால் என் கருத்து தேவைஇல்லை. இருந்தாலும் படம் சரியாக ஓடாவிட்டால் கமலே வேறு வேறு கெட்டப்பில் எல்லா வூருக்கும் சென்று படம் பார்க்க நினைத்தாராம். தினமும் ஒரு ஆள் வருகிறார் என்று படத்தை ஒட்டுவார்களாம். ச்சே ஒரு கின்னேஸ் ரெகார்டை தமிழ்நாடு மிஸ் பண்ணி விட்டது.

வேதாளம் : குசேலன் படத்தில் எதோ சஸ்பென்சாமே ?


விக்ரமாதித்தன் : ரஜினிக்கு எத்தனை பாடல்கள் என்பது தான் சஸ்பென்ஸ் என்று பி. வாசு ஒரு பேட்டியில் சொன்னார். இப்போது ரஜினிக்கு இரண்டு பாடல்கள் என்று சஸ்பென்ஸ் வெளியானதால் படம் ஓடுமா என்ற சந்தேகம் வந்திருக்கிறதாம்.

வேதாளம் : இறுதியாக ஒரு சந்தேகம்? ரஜினியின் எந்த படத்தை பார்த்தாலும் அதற்கு முந்திய படம் பரவாயில்லை போல் தோன்றுகிறதே. அப்படியானால் அவரின் முதல் படம் பார்க்கும் போது என்ன தோன்றியிருக்கும்?

விக்ரமாதித்தன் : ? ? ? ? ?


இதை வாசித்த நண்பர்களே இந்த கேள்விக்கு விக்கியிடம் பதில் அல்லது கருத்து இல்லாததால் அவன் தலை சுக்கு 99 ஆவதை தவிர்க்க நீங்கள் கருத்து சொல்லுங்களேன். சொல்பவர்களுக்கு என் சொத்தில் பாதியும் (50 பைசா) கொடுத்து சமீபத்தில் மும்பை ரெட் லைட் ஏரியாவில் தத்தெடுத்த என் 20 வயது மகளையும் உங்களுக்கே கல்யாணம் பண்ணி தருவதாக இதன் மூலம் வாக்களிக்கிறேன்.