Thursday, October 6, 2011

விஜய் ரசிகன்

அது பிட்டு படங்களுக்கு தமிழ்நாடு முழுக்கவே மிகவும் தட்டுப்பாடான காலம். நான், குமார், கருப்பு மூவரும் மதுரையில் மது, மற்றும் பழனி ஆறுமுகா என்று தியேட்டர்களை தேடி ஓடிய காலம். சில சமயங்களில் மட்டுமே பிட்டு ஓட்டுவார்கள். ஆனாலும் நம்பிக்கையாக தினமும் குமாரும், கருப்பும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தியேட்டருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். எனக்கு அவ்வளவு வசதி இல்லாததால் சில சமயம் மட்டுமே அவர்களுடன் சேர்ந்து பிட்டு படம் பார்க்க முடியும். அப்போது எந்த அரசின் மண்ணாங்கட்டிக் கொள்கையோ தெரியவில்லை. எந்த தியேட்டரிலும் பிட்டு ஓட்டவில்லை. நாங்கள் மூவரும் மிகவும் மனமொடிந்து போனோம். சில மாதங்களில் திடீரென்று குமாரும், கருப்பும் சுறுசுறுப்பாக படம் பார்க்க ஆரம்பித்தனர். அதுவும் தமிழ் படம். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன பசங்க திருந்தீட்டன்களா என்று நினைத்தேன். பிறகு தான் தெரிந்தது அவர்கள் பார்க்க ஆரம்பித்தது சங்கவி என்ற நடிகை நடித்த படம். சங்கவி அந்தக்காலக்கட்டதில் உட்கார் என்று சொன்னால் படுத்து விடுகிற டைப். அவர் நடித்த படங்களை பார்க்க ஆரம்பித்தனர் இவர்கள் இருவரும்.அப்போது தான் ஒரு விஷயத்தை கவனித்தேன். அது சங்கவி நடிக்கும் படங்கள் பெரும்பாலும் விஜய் நடித்ததகவோ அல்லது அவர் அப்பா SAC டைரக்ட் பண்ணியதாகவோ இருந்தது. SAC ஒரு மாபெரும் கலைஞர். பிட்டு பட உலகம் நிச்சயமாக ஒரு அருமையான ஒரு கலைஞரை இழந்தது பற்றி தன்னைத்தானே கொட்டிகொள்ளும் காலம் வந்தே தீரும். அதனால் என்ன அவர் அந்த பிட்டுக்கலையே நாசுக்காக தன படத்திலும், மகன் படத்திலும் சேர்த்து வந்தார். கரும்பை தேடிய எறும்பு போல் நாங்கள் அவர் படங்களை பார்க்க தொடங்கினோம். எனக்கு கம்ப்யூட்டர் கிடைத்து விட்டதால் உலக பிட்டு எனக்கு பரிச்சயமாகி விட்டது. அதனால் தியேட்டருக்கு போய் பிட்டு பர்ர்க்க அவசியமில்லாமல் போய் விட்டது. ஆனாலும் குமாரும், கருப்பும் சங்கவி மற்றும் விஜய் படங்களை தொடர்ந்து பார்த்து வந்தனர். நண்பர்கள் மத்தியில் கேள்வியும் கேலியும் வந்த போது சங்கவி ரசிகர்கள் என்று சொல்ல கூச்சப்பட்டுக்கொண்டு விஜய் ரசிகர்கள் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். நாளடைவில் இந்த சங்கவி ரசிகர்கள் விஜய் ரசிகர்களாகவே மாறினர். சமீபத்தில் மதுரையில் நடந்த விஜய் பட விழாவில் இவர்கள் மிக முக்கிய பங்கற்றினர். மேலும் விஜய் மற்றும் அவர் அப்பா ஆரம்பித்த மக்கள் இயக்கத்தில் இவர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள். இந்த உள்ளாட்சி தேர்தலில் இவர்கள் உங்களிடம் ஓட்டு கேட்டு வருவார்கள். ஏற்கனவே SAC சாருக்கு எப்படியாவது பிரதமர் ஆகும் கனவு இருக்கிறது. அதற்க்கான முழு தகுதியும் அவருக்கு இருக்கிறது. ஏற்கனவே அவர் பல படங்களில் சட்டத்தையும், அதில் நடித்த நடிகைகளையும் கடித்து குதறியதால் அவருக்கு சட்டமும், பெண்களும் அத்துப்படி. (ஆனால் அவர் படத்தில் வைக்கும் சட்டத்துக்கும் உண்மையான சட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது வேற விஷயம்.). அவர் மகனுக்கும் முதல் அமைச்சர் ஆகும் கனவு இருக்கிறது. அதற்காக அரை வேக்காட்டு அண்ணா ஹசாரே உடன் சேர்ந்து ஊழலை எதிர்க்க புறப்பட்டு விட்டார். (டேய் ஒழுங்கா டாக்சை கட்டுங்கடா ). அதற்க்கு கருப்பும் குமாரும் இன்னும் பிற சங்கவி மன்னிக்கவும் விஜய் ரசிகர்கள் உழைக்க தயாராக இருக்கிறார்கள். அவர்களும் மந்திரியாகும் கனவில் இருக்கிறார்கள். இப்படித்தான் இங்கே மந்திரிகளும் உருவாகிறார்கள். ஆமாம் நாம் எங்கே போகிறோம்?

Sunday, June 20, 2010

ராவணன் விமர்சனம்


ஒரு பத்தினி ஒரு புருஷன் சந்தேக பட்டான்னு இன்னொரு புருசனுடன் ஓட முயற்சிக்கிறாள். இது தான் கதை. முன்னாடி பாலச்சந்தர் தான் இப்படி புரட்சிகரமா தமிழ் சமுதாயத்த கெடுத்துக்கிட்டிருந்தார். இப்ப அவர் வழியில் மணியும் அவர் மனைவியும்.
வழக்கம் போல உருப்படாத படத்துக்கு உயிரை கொடுத்து உழைக்கும் விக்ரம் இந்த படத்துக்கும் உயிரை கொடுத்து உழைத்திருக்கிறார்.
மணி ஒரு சில ஆங்கில படத்திலிருந்து சில காட்சிகளும், ரஹ்மான் ட்ராய் படத்திலிருந்து சில பிட்டுகளையும் உருவி இருக்கின்றனர்.
விக்ரம் பேசாம மிருகங்களுக்கு மிமிக்ரி கொடுக்க போகலாம். அவர் அப்படித்தான் இந்த படத்தில் பேசுகிறார். மணியும், ரஹ்மானும் தமிழ் படங்களின் மீதான பிடிமானத்தை இழந்து வருவதற்கு இந்த படமே சாட்சி. மனசுக்கு கஷ்டமாக தான் இருக்கு. மணி படத்தை டி ராஜேந்தர் படத்தோட ஒப்பிடுவதற்கு. ஆனாலும் வேற வழியில்ல. டி ராஜேந்தர் படத்தில் எல்லாம் இருக்கும் ஆக்சன், காமெடி, செண்டிமெண்ட், பைட். ஆனால் எது எங்க இருக்கணுமோ அது அங்க இருக்காது. இந்த படத்திலும் அதே தான். ஒளிப்பதிவு, எடிட்டிங், etc, etc.. எல்லாம் இருந்தும் எது எப்படி எங்கே இருக்கணுமோ அது அங்கே இல்ல.

Wednesday, June 16, 2010

தமிழன் தாங்கு வாண்டா ....


தினமும் பேப்பர் பார்க்கும் போது என் மனதில் எழுந்த சந்தேகங்கள்.
குஷ்பூ இன்னும் தமிழறிஞராக கருணாநிதியால் அறிவிக்கப்படவில்லையே ஏன்?
கருணாநிதி குடும்பத்தில் பிறந்த சிறு குழந்தை கூட தமிழ் புலவராகி விடுகிறதே. ஏன்?
பக்கத்து மாநிலமான கர்நாடகா வில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி 28000 கோடி முதலீட்டை பெற்றுள்ள போது, இங்கே 600 கோடி வெட்டியாக நம் பணம் செம்மொழி மாநாடு என்ற பெயரில் வீணாகிறதே. ஏன்?
கருணாநிதி மாநாடு நடத்தி தான் தமிழ் வளர வேண்டுமா? அவருக்கு முன்னாள் தமிழ் என்ற மொழி வாழ்ந்ததோ, வளர்ந்ததோ இல்லையா என்று யாரும் கேட்பதில்லையே. ஏன்?
எல்லா அமைச்சர்களும் தினமும் ஒரு செம்மொழி சிலைக்கு முன் போஸ் கொடுத்து கொண்டிருக்கிறார்களே. இவர்கள் இல்லாமலே நிர்வாகம் வழக்கம் போல நடக்கிறதே. இவர்களெல்லாம் ஏன்?
இப்படி ஒரு கேடு கேட்ட மாநாட்டை லக்கி லுக் போன்ற செம்மொழி தமிழர்களெல்லாம் ஆதரிக்கிறார்களே ஏன்?

செம்மொழி தொடர்பில்லாத மேலும் சில சந்தேகங்கள்.
இன்னும் மதுரையில் அழகிரி பாத் ரூம் போனதுக்கு கட் அவுட் வைக்கலையே ஏன்?
கொடநாடு என்றால் ஜெயலலிதாவுக்கு கோபம் வருகிறதே ஏன்?
கிழக்கு பதிப்பகம், அழகிரியின் வாழ்க்கை வரலாறை ஆறு ஆறு மாதங்களாக பிரித்து குறைந்தது 100 புத்தகம் கூட போடவில்லையே ஏன்?

இதற்க்கெல்லாம் ஒரே பதில் தான் இருக்க வேண்டும். அது.....
தமிழன் தாங்கு வாண்டா ....

Sunday, March 7, 2010

கதவை திற கழிசடைகள் வரட்டும்

இவருடைய கட்டுரை குமுதத்தில் வரும் போது பார்த்திருக்கிறேன் ஆனால் இந்த ஆளை படத்தில் பார்த்தாலே சிரிப்பு தான் வரும் இது வரை படித்ததில்லை. இப்போது இவர் மாட்டிய பிறகு கிடைத்த குமுதம் இதழை தேடி படித்தேன். அது புலன்களை அடக்குவது பற்றியது. மற்றவர்கள் புலன்களை அடக்க வேண்டும். இவர் மட்டும் பு வில் ஆரம்பிக்கிற வேற எதையாவது அடக்குவார். இந்த மாதிரி ஆட்கள் எப்படி வருகிறார்கள். யார் இவர்களை வளர்த்து விடுகிறார்கள் என்று யோசித்ததில் யாரெல்லாம் எப்படி வருமானம் வருது என்று தெரியாதவர்கள் தான் இந்த மாதிரி ஆளிடம் போகிறார்கள். உதாரணமாக ரஜினியை எடுத்துக் கொள்வோம். அவருக்கு அவர் படம் எப்படி ஓடுகிறது என்றே தெரியவில்லை. ஏன் ஓடுகிறது என்றும் தெரியவில்லை.(நமக்கு மட்டும் தெரியுமாக்கும் ). அதனால் இவரை போல ஆட்களிடம் ஆசி வழங்குங்கள் என்று ஒரு அமௌண்டை கொடுக்க வேண்டியது. இப்படித்தான் இவர்கள் வளர்கிறார்கள். பிறகு ஆசிரமம் வைத்து பு (லங்களை) அடக்க வேண்டியது.
மேலும் எது செய்தாலும் அதற்க்கு ஒரு சாயம் பூச வேண்டியது. ஒரு பிரபலமான (?) வலைப்பக்கத்தில் பார்த்தேன். சாமியார் செய்தது தப்பில்லாத மாதிரியும், அதை சன் டிவி ஒளிபரப்பியதும் நக்கீரனில் வந்ததும் தப்பு என்ற ரீதியில் எழுதுகிறார்கள். இதையே தான் கருணாநிதியும் சொல்கிறார். சூத்திரன் என்றால் பத்திரிகையில் தப்பாக எழுதுகிறார்கள் என்று. அப்போது இதை தப்பு என்று இதே வலையில் எழுதி இருந்தார்கள். இருவரும் செய்வது தப்பு என்று நமக்கு மட்டுமே தெரிகிறது. இவர்களெல்லாம் இந்து மதத்தின் ஆதரவாளர்கள் என்று சொல்வதால் மட்டுமே அந்த மதத்தின் மேல் நமக்கு வெறுப்பு வருகிறது. முதலில் சாமியாரை ஆதரிக்க வேண்டியது. அவன் எதாவது செய்து மாட்டினால் யாரும் அதை பற்றி எழுதக்கூடாது. எழுதினால் அதை மஞ்சள் பத்திரிகை என்று சொல்ல வேண்டியது.

கணுக்கால் தெரியும் அளவு சேலை கட்டினாலே ஆபாச படத்தில் அழகி என்று தலைப்பு போடும் குமுதம் தான் இந்த ஆளை கிட்டத்தட்ட ஊருக்கு அறிமுகபடுத்தியது. அவர்கள் செய்தது தப்பில்லையா?.
என்னை பொறுத்தவரை இவர் ஒன்றும் பெரிய தப்பு செய்துவிடவில்லை. தப்பு பெரிதாக தெரிய காரணம் அவர் போட்டிருந்த வேஷம், உருவாக்கப்பட்ட பிம்பம், மற்றும் இந்த மாதிரி செய்திகளில் நமக்கு இருக்கும பொறாமையான ஆர்வம் மட்டுமே.
இதை எழுதும் போது பக்கத்துக்கு வீட்டு பையன் சாமியார் பத்தி கதை எழுதுறீங்களே அதென்ன செக்ஸ் கதைய என்று கேட்டான். (அடப்பாவிகளா)

Saturday, January 2, 2010

கிழக்கும், வழக்கும்


இந்த புத்தகம் வாங்கு முன் சில ப்ளாக்கர்ஸ் விமர்சனத்தில் ஆகா ஓஹோ என்று எழுதி இருந்தார்கள். அவர்களுக்கு இருக்கும் நோக்கங்கள் எதுவும் எனக்கு இல்லாததால் இந்த புத்தகம் எனக்கு மிகவும் ஏமாற்றத்தை தந்தது. திரு. கார்த்திகேயன், எழுதிய ராஜீவ் கொலை வழக்கு புத்தகமும், இந்த புத்தகமும் ஒரே விஷயத்தை சொன்னாலும், கார்த்திகேயன் புத்தகம் மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டிருந்தது. அதை விட விஷயம் குறைவான இந்த புத்தகம் ஒரே ஒரு விஷயத்தை புதிதாக சொல்கிறது. அது வைகோ - தம்பி, சிவராசனுடன் பேசியது. அதுவும் உறுதி படுத்தாத செய்தி என்று திரு. ரகோத்தமனே சொல்கிறார் என்றாலும் இந்த ஒரு செய்தியே கிழக்கு பதிப்பகத்தாரை அவசரப்படுத்தி இந்த புத்தகத்தை வெளியிட செய்திருக்கிறது

வழக்கம் போல நாளை சனிக்கிழமை என்ற சாதா விஷயத்தை கூட பரபரப்பாக சொல்லும் பா. ராகவன் , மற்றும் அவரது சகாக்களின் கைவண்ணம் இந்த புத்தகத்தின் சாதாரண விசயங்களில் தெரிகிறது. இந்த இரண்டு புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தது கார்த்திகேயன் புத்தகமே. ( நீ என்ன பட்டிமன்ற நடுவரா ?). மிகவும் அழகாக செல்லும் அந்த புத்தகம்( முக்கியமாக ரகோத்தமன் மாதிரி யாரையும் திட்டாத புத்தகம்) இந்த வழக்கில் எல்லா அம்சங்களையும் தொட்டு செல்கிறது.

இனிமேல் கிழக்கு புத்தகம் என்றால் ஒன்றுக்கு நூறு முறை யோசித்து வாங்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். ஒரே விஷயத்தை வெறி பிடித்த மாதிரி பல புத்தகமாக எப்படி சார் போடுகிறீர்கள்?

Saturday, September 5, 2009

கந்தல் சாமி


கந்தல் சாமி. கதை - இந்தக் கதையை எழுதியவர் கடந்த 75 வருடங்களாக தமிழ் சினிமாவை பார்க்காமல் எழுதியதால் இது மிகவும் புதுமையான கதை. படம் பார்ப்பவர் சினிமாவோ சீரியலோ அவர் வாழ்க்கையில் பார்த்திருக்க கூடாது. விக்ரம் - இந்த படத்தில் நடித்ததுக்கு பேசாமல் பீமா பார்ட் 2 பண்ணியிருக்கலாம். எங்கே படம் பார்ப்பவர்கள் படம் நல்லாயிருக்குன்னு சொல்லிருவங்கன்னு பயந்து பாட்டெல்லாம் அவரே பாடியிருக்கார். ஸ்ரேயா - இந்த படம் பார்ப்பதுக்கு முன் ஸ்ரேயான்னா எதோ பொம்பளைன்னு நினச்சிருந்தேன். இப்ப தான் தெரியுது ஸ்ரேயான்னா ஆம்பளைன்னு. சுசீ கணேசன் - Five Star எடுத்த சுசீ கணேசனா இது. படம் எடுக்க சொன்னா power point slide எடுத்துருக்காரு. போற போக்கை பார்த்த விஜய் பட டைரக்டர் ஆக சான்ஸ் நிறையவே இருக்கு. ஏகாம்பரம் - இவரு தான் ஒளிப்பதிவாளர். இந்த படத்துல photography ல நிறைய புதுமை பண்ணி இருக்குறதா பேட்டி எல்லாம் குடுத்தாரு. hollywood க்கே இந்த படம் சவால் விடும்னு சொன்னாரு. முதல்ல indian news reel க்கு போட்டியா எடுங்க சார். தானு - இவர் எடுத்த எந்த படமும் ஓடுன மாதிரியே தெரியல. ஆனாலும் சளைக்காம 50 கோடி 60 கோடி ன்னு செலவு பண்றாரு. எவ்வளவு அடி வாங்குனாலும் தாங்குரானே இவன் ரொம்ப நல்லவனா இருப்பானோ? படம் பார்க்கதவர்களுக்கு - விக்ரம் போடோவையும் ஸ்ரேயா போட்டோவையும் வைத்து பவர் பாயிண்ட் ல ஸ்லைடு ஷோ பன்னுநீங்கன்னா அது தன கந்த சாமி.

Saturday, April 11, 2009

கொத்தனார் தமிழ் உரை

நாளுக்கு நாள் தமிழ் வளர்ந்து வரும் வேகத்தில் தினமும் புது dictionary போடணும் போல இருக்கு. ஏற்கனவே கோனார் தமிழ் உரை இருப்பதனால் காப்பி ரைட் பிரச்சனை வராமல் இருக்க கொத்தனார் தமிழ் உரையை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன். இந்த கொத்தனார் தமிழ் உரையில் சமீபத்தில் அர்த்தம் மாறிய ஒரு சில வார்த்தைகளை உங்களுக்கு update செய்கிறேன்.
அன்பழகன் -- சட்டையை கழற்ற சொன்னால் வேட்டியையும் கழற்றி விட்டு நிற்பவர்.
அழகிரி -- அப்பா முதலமைச்சராக இருக்கும் போது ஆட்டம் போடுபவர்.
அமைச்சர் -- ரௌடித்தனம் செய்து சம்பாதிப்பவர்.
தேர்தல் -- J.K. ரித்தீஸ் செலவு பண்ணும் திருவிழா.
கருணாநிதி -- இவரை போல ஒரு அப்பா நமக்கு இல்லையே என்று தமிழகத்தில் உள்ள எல்லா மகன்களையும் ஏங்க வைத்த குடும்பத் தலைவர்.
வைக்கோ -- இலங்கை தமிழருக்காக கதறி கண்ணீர் விட்டு நாலு M.P. சீட் வாங்குபவர்.
விஜயகாந்த் -- பாகிஸ்தான் தீவிரவாதி யாரும் உதைக்க சிக்காததால் தமிழக மக்களை வதைப்பவர்.
சரத்குமார், கார்த்திக் -- அவர்களின் ஒரு வோட்டு யாருக்கு என்று தினமும் பத்திரிக்கைகளை குழப்புபவர்கள்.
ஜெயலலிதா -- தினமும் பிரதமர் கனவிலே இருப்பவர்.
பிரதமர் -- ஒரு வார்த்தை பேசும் முன் இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளிடமும் பெர்மிசன் வாங்குபவர்.
ஜனாதிபதி -- இந்திய கிரிக்கெட் மாட்சில் ஜெயிக்கும் போது மட்டும் வாழ்த்தி அறிக்கை விடுபவர்.
இலங்கை தமிழர் -- முப்பது வயசுக்குள் சாவதற்கென்றே பிறந்தவர். இலங்கை பிரச்சனை -- பேச்சையும், பேரணியையும் வளர்த்து விட்டு வோட்டு வாங்கும் பிரச்சனை.