Sunday, June 20, 2010

ராவணன் விமர்சனம்


ஒரு பத்தினி ஒரு புருஷன் சந்தேக பட்டான்னு இன்னொரு புருசனுடன் ஓட முயற்சிக்கிறாள். இது தான் கதை. முன்னாடி பாலச்சந்தர் தான் இப்படி புரட்சிகரமா தமிழ் சமுதாயத்த கெடுத்துக்கிட்டிருந்தார். இப்ப அவர் வழியில் மணியும் அவர் மனைவியும்.
வழக்கம் போல உருப்படாத படத்துக்கு உயிரை கொடுத்து உழைக்கும் விக்ரம் இந்த படத்துக்கும் உயிரை கொடுத்து உழைத்திருக்கிறார்.
மணி ஒரு சில ஆங்கில படத்திலிருந்து சில காட்சிகளும், ரஹ்மான் ட்ராய் படத்திலிருந்து சில பிட்டுகளையும் உருவி இருக்கின்றனர்.
விக்ரம் பேசாம மிருகங்களுக்கு மிமிக்ரி கொடுக்க போகலாம். அவர் அப்படித்தான் இந்த படத்தில் பேசுகிறார். மணியும், ரஹ்மானும் தமிழ் படங்களின் மீதான பிடிமானத்தை இழந்து வருவதற்கு இந்த படமே சாட்சி. மனசுக்கு கஷ்டமாக தான் இருக்கு. மணி படத்தை டி ராஜேந்தர் படத்தோட ஒப்பிடுவதற்கு. ஆனாலும் வேற வழியில்ல. டி ராஜேந்தர் படத்தில் எல்லாம் இருக்கும் ஆக்சன், காமெடி, செண்டிமெண்ட், பைட். ஆனால் எது எங்க இருக்கணுமோ அது அங்க இருக்காது. இந்த படத்திலும் அதே தான். ஒளிப்பதிவு, எடிட்டிங், etc, etc.. எல்லாம் இருந்தும் எது எப்படி எங்கே இருக்கணுமோ அது அங்கே இல்ல.

Wednesday, June 16, 2010

தமிழன் தாங்கு வாண்டா ....


தினமும் பேப்பர் பார்க்கும் போது என் மனதில் எழுந்த சந்தேகங்கள்.
குஷ்பூ இன்னும் தமிழறிஞராக கருணாநிதியால் அறிவிக்கப்படவில்லையே ஏன்?
கருணாநிதி குடும்பத்தில் பிறந்த சிறு குழந்தை கூட தமிழ் புலவராகி விடுகிறதே. ஏன்?
பக்கத்து மாநிலமான கர்நாடகா வில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி 28000 கோடி முதலீட்டை பெற்றுள்ள போது, இங்கே 600 கோடி வெட்டியாக நம் பணம் செம்மொழி மாநாடு என்ற பெயரில் வீணாகிறதே. ஏன்?
கருணாநிதி மாநாடு நடத்தி தான் தமிழ் வளர வேண்டுமா? அவருக்கு முன்னாள் தமிழ் என்ற மொழி வாழ்ந்ததோ, வளர்ந்ததோ இல்லையா என்று யாரும் கேட்பதில்லையே. ஏன்?
எல்லா அமைச்சர்களும் தினமும் ஒரு செம்மொழி சிலைக்கு முன் போஸ் கொடுத்து கொண்டிருக்கிறார்களே. இவர்கள் இல்லாமலே நிர்வாகம் வழக்கம் போல நடக்கிறதே. இவர்களெல்லாம் ஏன்?
இப்படி ஒரு கேடு கேட்ட மாநாட்டை லக்கி லுக் போன்ற செம்மொழி தமிழர்களெல்லாம் ஆதரிக்கிறார்களே ஏன்?

செம்மொழி தொடர்பில்லாத மேலும் சில சந்தேகங்கள்.
இன்னும் மதுரையில் அழகிரி பாத் ரூம் போனதுக்கு கட் அவுட் வைக்கலையே ஏன்?
கொடநாடு என்றால் ஜெயலலிதாவுக்கு கோபம் வருகிறதே ஏன்?
கிழக்கு பதிப்பகம், அழகிரியின் வாழ்க்கை வரலாறை ஆறு ஆறு மாதங்களாக பிரித்து குறைந்தது 100 புத்தகம் கூட போடவில்லையே ஏன்?

இதற்க்கெல்லாம் ஒரே பதில் தான் இருக்க வேண்டும். அது.....
தமிழன் தாங்கு வாண்டா ....

Sunday, March 7, 2010

கதவை திற கழிசடைகள் வரட்டும்

இவருடைய கட்டுரை குமுதத்தில் வரும் போது பார்த்திருக்கிறேன் ஆனால் இந்த ஆளை படத்தில் பார்த்தாலே சிரிப்பு தான் வரும் இது வரை படித்ததில்லை. இப்போது இவர் மாட்டிய பிறகு கிடைத்த குமுதம் இதழை தேடி படித்தேன். அது புலன்களை அடக்குவது பற்றியது. மற்றவர்கள் புலன்களை அடக்க வேண்டும். இவர் மட்டும் பு வில் ஆரம்பிக்கிற வேற எதையாவது அடக்குவார். இந்த மாதிரி ஆட்கள் எப்படி வருகிறார்கள். யார் இவர்களை வளர்த்து விடுகிறார்கள் என்று யோசித்ததில் யாரெல்லாம் எப்படி வருமானம் வருது என்று தெரியாதவர்கள் தான் இந்த மாதிரி ஆளிடம் போகிறார்கள். உதாரணமாக ரஜினியை எடுத்துக் கொள்வோம். அவருக்கு அவர் படம் எப்படி ஓடுகிறது என்றே தெரியவில்லை. ஏன் ஓடுகிறது என்றும் தெரியவில்லை.(நமக்கு மட்டும் தெரியுமாக்கும் ). அதனால் இவரை போல ஆட்களிடம் ஆசி வழங்குங்கள் என்று ஒரு அமௌண்டை கொடுக்க வேண்டியது. இப்படித்தான் இவர்கள் வளர்கிறார்கள். பிறகு ஆசிரமம் வைத்து பு (லங்களை) அடக்க வேண்டியது.
மேலும் எது செய்தாலும் அதற்க்கு ஒரு சாயம் பூச வேண்டியது. ஒரு பிரபலமான (?) வலைப்பக்கத்தில் பார்த்தேன். சாமியார் செய்தது தப்பில்லாத மாதிரியும், அதை சன் டிவி ஒளிபரப்பியதும் நக்கீரனில் வந்ததும் தப்பு என்ற ரீதியில் எழுதுகிறார்கள். இதையே தான் கருணாநிதியும் சொல்கிறார். சூத்திரன் என்றால் பத்திரிகையில் தப்பாக எழுதுகிறார்கள் என்று. அப்போது இதை தப்பு என்று இதே வலையில் எழுதி இருந்தார்கள். இருவரும் செய்வது தப்பு என்று நமக்கு மட்டுமே தெரிகிறது. இவர்களெல்லாம் இந்து மதத்தின் ஆதரவாளர்கள் என்று சொல்வதால் மட்டுமே அந்த மதத்தின் மேல் நமக்கு வெறுப்பு வருகிறது. முதலில் சாமியாரை ஆதரிக்க வேண்டியது. அவன் எதாவது செய்து மாட்டினால் யாரும் அதை பற்றி எழுதக்கூடாது. எழுதினால் அதை மஞ்சள் பத்திரிகை என்று சொல்ல வேண்டியது.

கணுக்கால் தெரியும் அளவு சேலை கட்டினாலே ஆபாச படத்தில் அழகி என்று தலைப்பு போடும் குமுதம் தான் இந்த ஆளை கிட்டத்தட்ட ஊருக்கு அறிமுகபடுத்தியது. அவர்கள் செய்தது தப்பில்லையா?.
என்னை பொறுத்தவரை இவர் ஒன்றும் பெரிய தப்பு செய்துவிடவில்லை. தப்பு பெரிதாக தெரிய காரணம் அவர் போட்டிருந்த வேஷம், உருவாக்கப்பட்ட பிம்பம், மற்றும் இந்த மாதிரி செய்திகளில் நமக்கு இருக்கும பொறாமையான ஆர்வம் மட்டுமே.
இதை எழுதும் போது பக்கத்துக்கு வீட்டு பையன் சாமியார் பத்தி கதை எழுதுறீங்களே அதென்ன செக்ஸ் கதைய என்று கேட்டான். (அடப்பாவிகளா)

Saturday, January 2, 2010

கிழக்கும், வழக்கும்


இந்த புத்தகம் வாங்கு முன் சில ப்ளாக்கர்ஸ் விமர்சனத்தில் ஆகா ஓஹோ என்று எழுதி இருந்தார்கள். அவர்களுக்கு இருக்கும் நோக்கங்கள் எதுவும் எனக்கு இல்லாததால் இந்த புத்தகம் எனக்கு மிகவும் ஏமாற்றத்தை தந்தது. திரு. கார்த்திகேயன், எழுதிய ராஜீவ் கொலை வழக்கு புத்தகமும், இந்த புத்தகமும் ஒரே விஷயத்தை சொன்னாலும், கார்த்திகேயன் புத்தகம் மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டிருந்தது. அதை விட விஷயம் குறைவான இந்த புத்தகம் ஒரே ஒரு விஷயத்தை புதிதாக சொல்கிறது. அது வைகோ - தம்பி, சிவராசனுடன் பேசியது. அதுவும் உறுதி படுத்தாத செய்தி என்று திரு. ரகோத்தமனே சொல்கிறார் என்றாலும் இந்த ஒரு செய்தியே கிழக்கு பதிப்பகத்தாரை அவசரப்படுத்தி இந்த புத்தகத்தை வெளியிட செய்திருக்கிறது

வழக்கம் போல நாளை சனிக்கிழமை என்ற சாதா விஷயத்தை கூட பரபரப்பாக சொல்லும் பா. ராகவன் , மற்றும் அவரது சகாக்களின் கைவண்ணம் இந்த புத்தகத்தின் சாதாரண விசயங்களில் தெரிகிறது. இந்த இரண்டு புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தது கார்த்திகேயன் புத்தகமே. ( நீ என்ன பட்டிமன்ற நடுவரா ?). மிகவும் அழகாக செல்லும் அந்த புத்தகம்( முக்கியமாக ரகோத்தமன் மாதிரி யாரையும் திட்டாத புத்தகம்) இந்த வழக்கில் எல்லா அம்சங்களையும் தொட்டு செல்கிறது.

இனிமேல் கிழக்கு புத்தகம் என்றால் ஒன்றுக்கு நூறு முறை யோசித்து வாங்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். ஒரே விஷயத்தை வெறி பிடித்த மாதிரி பல புத்தகமாக எப்படி சார் போடுகிறீர்கள்?