Saturday, January 2, 2010

கிழக்கும், வழக்கும்


இந்த புத்தகம் வாங்கு முன் சில ப்ளாக்கர்ஸ் விமர்சனத்தில் ஆகா ஓஹோ என்று எழுதி இருந்தார்கள். அவர்களுக்கு இருக்கும் நோக்கங்கள் எதுவும் எனக்கு இல்லாததால் இந்த புத்தகம் எனக்கு மிகவும் ஏமாற்றத்தை தந்தது. திரு. கார்த்திகேயன், எழுதிய ராஜீவ் கொலை வழக்கு புத்தகமும், இந்த புத்தகமும் ஒரே விஷயத்தை சொன்னாலும், கார்த்திகேயன் புத்தகம் மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டிருந்தது. அதை விட விஷயம் குறைவான இந்த புத்தகம் ஒரே ஒரு விஷயத்தை புதிதாக சொல்கிறது. அது வைகோ - தம்பி, சிவராசனுடன் பேசியது. அதுவும் உறுதி படுத்தாத செய்தி என்று திரு. ரகோத்தமனே சொல்கிறார் என்றாலும் இந்த ஒரு செய்தியே கிழக்கு பதிப்பகத்தாரை அவசரப்படுத்தி இந்த புத்தகத்தை வெளியிட செய்திருக்கிறது

வழக்கம் போல நாளை சனிக்கிழமை என்ற சாதா விஷயத்தை கூட பரபரப்பாக சொல்லும் பா. ராகவன் , மற்றும் அவரது சகாக்களின் கைவண்ணம் இந்த புத்தகத்தின் சாதாரண விசயங்களில் தெரிகிறது. இந்த இரண்டு புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தது கார்த்திகேயன் புத்தகமே. ( நீ என்ன பட்டிமன்ற நடுவரா ?). மிகவும் அழகாக செல்லும் அந்த புத்தகம்( முக்கியமாக ரகோத்தமன் மாதிரி யாரையும் திட்டாத புத்தகம்) இந்த வழக்கில் எல்லா அம்சங்களையும் தொட்டு செல்கிறது.

இனிமேல் கிழக்கு புத்தகம் என்றால் ஒன்றுக்கு நூறு முறை யோசித்து வாங்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். ஒரே விஷயத்தை வெறி பிடித்த மாதிரி பல புத்தகமாக எப்படி சார் போடுகிறீர்கள்?