
இந்த புத்தகம் வாங்கு முன் சில ப்ளாக்கர்ஸ் விமர்சனத்தில் ஆகா ஓஹோ என்று எழுதி இருந்தார்கள். அவர்களுக்கு இருக்கும் நோக்கங்கள் எதுவும் எனக்கு இல்லாததால் இந்த புத்தகம் எனக்கு மிகவும் ஏமாற்றத்தை தந்தது. திரு. கார்த்திகேயன், எழுதிய ராஜீவ் கொலை வழக்கு புத்தகமும், இந்த புத்தகமும் ஒரே விஷயத்தை சொன்னாலும், கார்த்திகேயன் புத்தகம் மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டிருந்தது. அதை விட விஷயம் குறைவான இந்த புத்தகம் ஒரே ஒரு விஷயத்தை புதிதாக சொல்கிறது. அது வைகோ - தம்பி, சிவராசனுடன் பேசியது. அதுவும் உறுதி படுத்தாத செய்தி என்று திரு. ரகோத்தமனே சொல்கிறார் என்றாலும் இந்த ஒரு செய்தியே கிழக்கு பதிப்பகத்தாரை அவசரப்படுத்தி இந்த புத்தகத்தை வெளியிட செய்திருக்கிறது
வழக்கம் போல நாளை சனிக்கிழமை என்ற சாதா விஷயத்தை கூட பரபரப்பாக சொல்லும் பா. ராகவன் , மற்றும் அவரது சகாக்களின் கைவண்ணம் இந்த புத்தகத்தின் சாதாரண விசயங்களில் தெரிகிறது. இந்த இரண்டு புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தது கார்த்திகேயன் புத்தகமே. ( நீ என்ன பட்டிமன்ற நடுவரா ?). மிகவும் அழகாக செல்லும் அந்த புத்தகம்( முக்கியமாக ரகோத்தமன் மாதிரி யாரையும் திட்டாத புத்தகம்) இந்த வழக்கில் எல்லா அம்சங்களையும் தொட்டு செல்கிறது.
இனிமேல் கிழக்கு புத்தகம் என்றால் ஒன்றுக்கு நூறு முறை யோசித்து வாங்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். ஒரே விஷயத்தை வெறி பிடித்த மாதிரி பல புத்தகமாக எப்படி சார் போடுகிறீர்கள்?
4 comments:
//இனிமேல் கிழக்கு புத்தகம் என்றால் ஒன்றுக்கு நூறு முறை யோசித்து வாங்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். ஒரே விஷயத்தை வெறி பிடித்த மாதிரி பல புத்தகமாக எப்படி சார் போடுகிறீர்கள்? //
arasiyal thalaiva.
நண்பர்கள் பகுதி என்பதை உருவாக்குங்கள். தொடர வேண்டும் என்று நிணைக்கின்றேன், உங்கள் மின் அஞ்சல் முடிந்தால் இந்த தொடர்புக்கு அளியுங்கள்,
texlords@gmail.com
1991 இல் பதிப்பாளராக இல்லாத ஒருவரை, இப்புத்தகம் பதிப்பாளர் என்று சுட்டுகிறது.
இது கிழக்கின் வன்மத்தின் வெளிப்பாடு.
இழவு வீட்டில் சுண்டல் விர்ற்பதிலும் காற்றுள்ள போதே தூற்றிகொல்ல்வதிலும் ராகவன் கைதேர்ந்தவர்! பிரபாகரன் மரணம் என்று தகவல் கிடைத்த உடனே அவர் செய்தது "பிரபாகரன் - வாழ்வும், மரணமும்!" புத்தகம் !!
அவரின் மூலம் பலனடையும் அவரது சகாக்கள் அதுவும் திராவிட ஆதரவாளாக ஈழ ஆதரவாளராக எல்லாம் காட்டிகொள்ளும் லக்கி லுக் போன்றோவர்கள் அதற்க்கு பாராட்டு மழை வேறு !
தமிழனின் நிலையை உலகிற்கு சொல்லவும் உலகத்தை பற்றி தமிழனிடம் சொல்லவும் இந்த உலகில் எந்த ஊடகமும் இல்லாத நிலையில், கிழட்டு பதிப்பகம் மட்டும் என்ன விதி விலக்கு ஆகிவிடுமா ??
"கிழட்டு பதிப்பக புத்தகம் வருகிறது, உங்கள் பாக்கட் பத்திரம் !!"
Post a Comment