Saturday, April 11, 2009

கொத்தனார் தமிழ் உரை

நாளுக்கு நாள் தமிழ் வளர்ந்து வரும் வேகத்தில் தினமும் புது dictionary போடணும் போல இருக்கு. ஏற்கனவே கோனார் தமிழ் உரை இருப்பதனால் காப்பி ரைட் பிரச்சனை வராமல் இருக்க கொத்தனார் தமிழ் உரையை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன். இந்த கொத்தனார் தமிழ் உரையில் சமீபத்தில் அர்த்தம் மாறிய ஒரு சில வார்த்தைகளை உங்களுக்கு update செய்கிறேன்.
அன்பழகன் -- சட்டையை கழற்ற சொன்னால் வேட்டியையும் கழற்றி விட்டு நிற்பவர்.
அழகிரி -- அப்பா முதலமைச்சராக இருக்கும் போது ஆட்டம் போடுபவர்.
அமைச்சர் -- ரௌடித்தனம் செய்து சம்பாதிப்பவர்.
தேர்தல் -- J.K. ரித்தீஸ் செலவு பண்ணும் திருவிழா.
கருணாநிதி -- இவரை போல ஒரு அப்பா நமக்கு இல்லையே என்று தமிழகத்தில் உள்ள எல்லா மகன்களையும் ஏங்க வைத்த குடும்பத் தலைவர்.
வைக்கோ -- இலங்கை தமிழருக்காக கதறி கண்ணீர் விட்டு நாலு M.P. சீட் வாங்குபவர்.
விஜயகாந்த் -- பாகிஸ்தான் தீவிரவாதி யாரும் உதைக்க சிக்காததால் தமிழக மக்களை வதைப்பவர்.
சரத்குமார், கார்த்திக் -- அவர்களின் ஒரு வோட்டு யாருக்கு என்று தினமும் பத்திரிக்கைகளை குழப்புபவர்கள்.
ஜெயலலிதா -- தினமும் பிரதமர் கனவிலே இருப்பவர்.
பிரதமர் -- ஒரு வார்த்தை பேசும் முன் இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளிடமும் பெர்மிசன் வாங்குபவர்.
ஜனாதிபதி -- இந்திய கிரிக்கெட் மாட்சில் ஜெயிக்கும் போது மட்டும் வாழ்த்தி அறிக்கை விடுபவர்.
இலங்கை தமிழர் -- முப்பது வயசுக்குள் சாவதற்கென்றே பிறந்தவர். இலங்கை பிரச்சனை -- பேச்சையும், பேரணியையும் வளர்த்து விட்டு வோட்டு வாங்கும் பிரச்சனை.

3 comments:

KRICONS said...

நல்ல எழுதிறேங்க...

வாழ்த்துகள்.

அப்படியே உங்க பதிவை Tamilish.com சேத்தேங்கன்ன இன்னும் பலர் உங்க பதிவை படிப்பாங்க.

Unknown said...

//"கொத்தனார் தமிழ் உரை//

பதிவு சூப்பர். ஆனா அடிக்கடி போடவும்

கி.பாலசுப்ரமணியன் said...

தேவி இதழிலும் அலம்பல் அகராதி வருகிரது. பார்த்தீர்களா