
இந்தப் பதிவை அடிக்கடி (???) கவனித்து வரும் (என்னைத் தவிர ) நண்பர்களுக்கு கடுமையான வேலையின் காரணமாக என்னால் எழுத முடியவில்லை. இனி அவ்வப்போது எழுதலாம் என்றிருக்கிறேன். ஆமாம் அடிக்கடி பதிவு எழுதுகிறவர்களுக்கு ஒரு கேள்வி. இப்படி வெறித்தனமாக பதிவு எழுதுகிறீர்களே. பூவாவுக்கு என்ன செய்கிறிர்கள்
சரி இனி பதிவுக்கு வருகிறேன். சமீப காலமாக (காலம் காலமாக) நான் சில கவிதைகளையும் பல கவிஞர்களையும் சந்திக்க நேர்ந்தது. ஒருவர் பாக்கெட்டில் மூன்று பேனா வைத்திருந்தால் நான்கு புனைப்பெயரில் கவிதை எழுதுகிறார். பத்து செகண்ட் குனிந்து கொண்டே நடந்தால் எதாவது கவிஞர் கடலைபருப்பு, அல்லது கவிஞர் காத்துவாயன் மேல் மோதி விடும் அபாயகரமான அளவுக்கு கவிஞர்களும், புதுக்கவிதை, ஹைக்கூ, புண்ணாக்கு போன்ற கவிதை வடிவங்களும் நிறைந்திருக்கின்றன. சமீபத்தில் நான் படித்த கவிதைகளில் பெண் கவிதாயினிகளின் பாடு பரவாயில்லை போல் தெரிகிறது. ஏனென்றால் எதாவது பலான புத்தகத்தை படித்து விட்டு வாக்கியத்தை மடித்து மடித்து எழுதி கவிதாயினி ஆகிறார்கள். அதனால் பாவப்பட்ட ஆண் கவிஞர்களை அதிகரிக்க வேண்டிய பொறுப்பு என் தலைக்கு மேல் (மயிர்?) தெரிவதால் இந்தப்பதிவு. இதில் கோடிட்ட இடங்களை மட்டும் நிரப்பி நீங்களும் உடனடிக் கவிஞராக இந்தப்பதிவு உதவும் என்று நம்புகிறேன்.
இதோ கவிதை Template.
நீ தான்
என்
தெருவின்
-----------
(சின்னவீடு, முகவரி, முதல்வேசி, பிச்சைக்காரி)
நான் எழுதும்
-------------- ல்
எல்லாம் நீ தான்
முதல்வரி
(குத்துப்பாட்டு, பலான புத்தகம், கவிதை)
நான் உன்னை
காணும் போது தான்
---------------
மறந்துவிடுகிறது.
(பையில் பணமிள்ளதது, என் பெயர், என் மனைவியின் பெயர், காதலியின் பெயர்)
எத்தனை நாள் தான்
உன்னிடம்
-----------
(கடன் சொல்வது, காதலை மறைப்பது, அடி வாங்குவது)
நீ தான்
என்
-----
(பிஞ்ச செருப்பு, மயிர், உயிர் )
நான் உன்னை
நோக்கினேன்
நீ என்
---------
நோக்கினாய்
(நோக்கியாவை, பாக்கெட்டை, படுக்கையை)
கவிதை எழுத பேனா இருந்தும் நேரமில்லாதவர்கள் இந்தப் பதிவிலுள்ள கவிதைகளை கோடிட்ட இடங்களை நிரப்பி பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். மறக்காமல் உங்கள் பெயருக்கு முன்னால் கவிஞர் என்று சேர்த்துக் கொள்ளவும். முடிந்தால் உங்களுக்கு இந்தக் கவிதைகளால் கிடைத்த பலன்களை பின்னூட்டமிடவும்.