Sunday, June 20, 2010

ராவணன் விமர்சனம்


ஒரு பத்தினி ஒரு புருஷன் சந்தேக பட்டான்னு இன்னொரு புருசனுடன் ஓட முயற்சிக்கிறாள். இது தான் கதை. முன்னாடி பாலச்சந்தர் தான் இப்படி புரட்சிகரமா தமிழ் சமுதாயத்த கெடுத்துக்கிட்டிருந்தார். இப்ப அவர் வழியில் மணியும் அவர் மனைவியும்.
வழக்கம் போல உருப்படாத படத்துக்கு உயிரை கொடுத்து உழைக்கும் விக்ரம் இந்த படத்துக்கும் உயிரை கொடுத்து உழைத்திருக்கிறார்.
மணி ஒரு சில ஆங்கில படத்திலிருந்து சில காட்சிகளும், ரஹ்மான் ட்ராய் படத்திலிருந்து சில பிட்டுகளையும் உருவி இருக்கின்றனர்.
விக்ரம் பேசாம மிருகங்களுக்கு மிமிக்ரி கொடுக்க போகலாம். அவர் அப்படித்தான் இந்த படத்தில் பேசுகிறார். மணியும், ரஹ்மானும் தமிழ் படங்களின் மீதான பிடிமானத்தை இழந்து வருவதற்கு இந்த படமே சாட்சி. மனசுக்கு கஷ்டமாக தான் இருக்கு. மணி படத்தை டி ராஜேந்தர் படத்தோட ஒப்பிடுவதற்கு. ஆனாலும் வேற வழியில்ல. டி ராஜேந்தர் படத்தில் எல்லாம் இருக்கும் ஆக்சன், காமெடி, செண்டிமெண்ட், பைட். ஆனால் எது எங்க இருக்கணுமோ அது அங்க இருக்காது. இந்த படத்திலும் அதே தான். ஒளிப்பதிவு, எடிட்டிங், etc, etc.. எல்லாம் இருந்தும் எது எப்படி எங்கே இருக்கணுமோ அது அங்கே இல்ல.

4 comments:

Unknown said...

/எது எப்படி எங்கே இருக்கணுமோ அது அங்கே இல்ல. //

யாருக்கு . ஜஸ்வர்யாராய்க்கா

Anonymous said...

விக்ரமன் - அழகிரிக்கு பாத்ரூம் வருதோ இல்லையோ என்னக்கு இப்பவே கண்ணா கட்டுது.

Unknown said...

அடுத்த பதிவு போட்டு நாட்டை வளப்படுத்துங்க தலைவரே

விஜய் ராஜன் said...

ஒரு பத்தினி ஒரு புருஷன் சந்தேக பட்டான்னு இன்னொரு புருசனுடன் ஓட முயற்சிக்கிறாள்.// திருவள்ளுவரால கூட ஒரு கருத்தை இப்டி ஒரே வரில சொல்ல முடியாது :)) அசத்துரீங்க போங்க...